“திறனற்ற நிர்வாகத்தால் ரூ.888 கோடி ஊழல்! இளைஞர்களின் பாவம் சும்மாவிடாது”- வானதி சீனிவாசன்

 
வானதி வானதி

அரசு வேலைக்காக இரவுபகல் பாராது அனுதினமும் ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் தயாராகி வரும் வேளையில், பணத்தாசைக்காக அவர்களின் எதிர்காலத்தையே சிதைத்த பாவம் திமுக அரசை இந்தப் பாவம் சும்மா விடாது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணிகளுக்கு விண்ணப்பித்திருந்த 1.12 லட்சம் இளைஞர்களை ஏமாற்றி, திரைமறைவில் ரூ.35 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களை நியமித்து அராஜகம் புரிந்துள்ளது திமுக அரசு. திறனற்ற நிர்வாகத்தால் ரூ.888 கோடி ஊழல் புரிந்துவிட்டு, தங்கள் கைகளாலேயே பணியாணை வழங்குவது போலப் பல லட்சம் ரூபாய் செலவில் நாடக விழா நடத்திவிட்டு, எங்கள் பிள்ளைகளை வேலையின்றித் தெருவில் நிற்கவிடுவது தான் திராவிட மாடலா முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே?

அரசு வேலைக்காக இரவுபகல் பாராது அனுதினமும் ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் தயாராகி வரும் வேளையில், பணத்தாசைக்காக அவர்களின் எதிர்காலத்தையே சிதைத்த பாவம் திமுக அரசை இந்தப் பாவம் சும்மா விடாது! செய்த வினைக்கான பலனை வரும் சட்டமன்றத் தேர்தலிலேயே திமுக அரசு அறுவடை செய்யும்! தனது ஆணவத்தாலேயே அழியும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.