“விளையாட்டுத் துறையின் மீது அக்கறைப் பொங்கி வழிவது போல பாசாங்கு”... உதயநிதியை சாடும் பாஜக

 
udhayanidhi

விளையாட்டு துறைக்கு, தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே  மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷனின் வங்கிக் கணக்கு முடக்கம்: அமலாக்கத் துறை  நடவடிக்கை | Bank account freezing of Udhayanidhi Stalin Foundation:  Enforcement Department action - hindutamil.in

இடுடுதுதொடர்பாக தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், “கேலோ இந்தியா- தமிழக பாஜக-வின் அதிகாரப்பூர்வ X- வலைதளப் பக்கமான @BJP4TamilNadu-ஐ ப்ளாக் செய்துவிட்டால், எங்களால் உங்களைக் கேள்வியே கேட்க முடியாது என்று கோழைத்தனமாக எண்ணும் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களே, வணக்கம்! எந்நேரமும் பொய்யான தகவல்களை உளறுவதையும், பின் ஊடகங்கள் கேள்விக் கேட்கையில் புறமுதுகிட்டு ஓடுவதையுமே வாடிக்கையாகக்கொண்ட நீங்கள் “கேலோ இந்தியா” பற்றி இப்பொழுது ஆதாரமற்ற சில சர்ச்சைகளை எழுப்பியுள்ளீர்கள்.

முதலில் “கேலோ இந்தியா” திட்டத்திற்கான வரைமுறைகள் என்னவென்று தெரியுமா? மாநிலங்களின் கோரிக்கைகளின் பொருட்டே, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும் என்ற குறைந்தபட்ச தகவலாவது அறிவீர்களா? அதுசரி… தமிழக விளையாட்டுத் துறையின் மீது அக்கறைப் பொங்கி வழிவது போல பாசாங்கு செய்யும் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே - உங்கள் துறை சம்மந்தப்பட்ட கீழ் வரும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க உங்களுக்கு திராணி உள்ளதா?

திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர்கள்! உதயநிதி ஸ்டாலின் போட்ட கட்டளை!  ஆள்பிடிக்கும் நிர்வாகிகள்! | Udhayanidhi Stalin Plan to induct new members  into DMK Youthwing ...

❓இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) நடத்தும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக தமிழகம் பங்கேற்க தவறியது ஏன்?

❓தமிழக விளையாட்டுக் கொள்கை கொண்டு வரப்படும் என்று கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று? 

❓அரசுப்பள்ளிகளில் 1:250-400 என்றிருந்த ஆசிரிய மாணவர் விகிதத்தை, 1:700 என்று மாற்றியமைத்து, உடற்கல்வி ஆசிரியர்களைக் குறைக்க உத்தரவிட்டது ஏன்?

❓புதுக்கோட்டை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானங்கள் மோசமான நிலையில் உள்ளது ஏன்?

❓பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதாக கூறிய வாக்குறுதி என்னவாயிற்று? 

❓திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியை, மாநிலத்தின் முதல் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியாக மாற்றுவதாக கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?

மத்திய அரசை எவ்வாறு குறை கூறுவது என்று மட்டுமே ராப்பகலாக சிந்தித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் விளையாட்டு துறையின் அவலங்களைப் பற்றி என்றுதான் சிந்திப்பீர்கள்? இவ்வாறு உங்கள் துறையின் வளர்ச்சியைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், மக்கள் வரிப்பணத்தில் கார் ரேஸ் நடத்துவதற்கு முட்டி மோதும் உங்களுக்கு, கடந்த பத்தாண்டுகளில் விளையாட்டு துறையின் நலனுக்கான ஒதுக்கப்படும் நிதியில் 180% அதிகரித்துள்ள பாஜகவைக் கேள்விக்கேட்க என்ன அருகதை இருக்கிறது உதயநிதி ஸ்டாலின்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.