”ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்"- ஸ்டாலினுக்கு தமிழிசை கண்டனம்
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு வேறு வேலை இல்லை எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல்ல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா... ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்... அதுவும் பாமக தலைவர் பெரியவர் டாக்டர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.. மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேலை வேலையில்லாமல் இதை சொல்லவில்லை..
மரியாதைக்குரிய முதலமைச்சர @mkstalin அவர்களே மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக… https://t.co/3ClLARWHxi
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) November 25, 2024
தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன்... 2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும்... யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை...” எனக் குறிப்பிட்டுள்ளார்.