‘புகழ் மணக்க’ என்பதற்கு ‘திகழ் மணக்க’னு பாடுறாங்க... உதயநிதி ராஜினாமா செய்வாரா?- தமிழிசை
தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கு ஒரு நீதி உதயநிதிக்கு ஒரு நீதியா? உதயநிதி இப்போது ராஜினாமா செய்வாரா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “இரண்டாவது முறை தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய போது அதில் தவறு நடந்ததை உதயநிதி சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். திமுகவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பற்றி கவலை இல்லை. அரசியல் செய்வது மட்டுமே அவர்களின் எண்ணம். புகழ் மணக்க’ என்பதற்கு ‘திகழ் மணக்க’னு பாடுறாங்க.. இதுவே வேற யாராவது செஞ்சிருந்தா... கொந்தளித்திருப்பார்கள்
திமுக நினைப்பது போல் 2026-ல் வெற்றி எளிதாக இருக்காது. திராவிடக் கட்சிகள் தனித்து நின்று இனி ஆட்சி அமைக்க முடியாது. 2026- இல் தமிழ்நாட்டில் நிச்சயம் கூட்டணி ஆட்சிதான் அமையும். மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமையும். திமுக தனித்துப் போட்டியிருந்தால் 40/40 சாத்தியமாகி இருக்காது. 2024 மக்களவைத் தேர்தலில் 10% ஓட்டுகளை திமுக இழந்துள்ளது. அதிமுகவாலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. 2026இல் கூட்டணி ஆட்சியில் பாஜக நிச்சயம் பங்கு வகிக்கும் மாநில தலைவர் இல்லாததால் பாஜக தன் போர் குணத்தை இழக்கவில்லை, புதிய உறுப்பினர் சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.