வெள்ள நிவாரணமாக ரூ.5,000 வழங்கக்கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

 
annamalai stalin

வெள்ள நிவாரணத் தொகையாக குடும்பத்துக்கு ரூ.5,000 வழங்கிட வேண்டுமென தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

Hyderabad: BJP leaders protest at EC office, arrested

இதுதொடர்பாக பாஜக மாநில பொதுசெயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையாக கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் ஏழை, எளிய மக்களும் நடுத்தரவர்க்க மக்களும் பெரிதும் பாதிப்படைந்தனர். வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்து உடைமைகள் பாழாகின. தினசரி வேலை வாய்ப்பை நம்பி இருப்பவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். 

எனவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூ.5,000 வீதம் தரவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொண்டார். ஆகவே பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5,000 நிவாரணநிதி வழங்கிட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகின்ற வெள்ளிக்கிழமை 19-11-2021 அன்று காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் கீழ்கண்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். மாவட்ட தலைவர்கள், தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.