“ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை நாங்கள் சும்மா விடப்போவதில்லை”- கரு.நாகராஜன்

 
அ

பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த மனித நேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி மீது தமிழக டிஜிபியிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப்  மீது நடவடிக்கைகள் எடுக்ககோரி  தமிழக பாஜக மாநில துணை தலைவர்கள்  கரு நாகராஜன், வழக்கறிஞர்  பால்கனகராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் தமிழ்நாடு காவல்துறையின் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவலை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், “ஹெச். ராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய யாக்கூப் கைது செய்ய வேண்டும் என டிஜிபியிடம் வீடியோ ஆதரித்துடன் புகார் அளித்துள்ளோம். ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. அவர் கொலை செய்வேன் என்ற வகையில் பேசிதால் இது என்ன தமிழ்நாடா? அவர் திமுக துணையுடன் பேசி உள்ளாரா? அவரை குண்டாஸில் கைது செய்ய வேண்டும். முதல்வர் முக ஸ்டாலின் சொல்லும் அமைதியான தமிழ்நாடு இது தானா? மேடையில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை மேடையில் வைத்து கொண்டு இவ்வாறு பேசி உள்ளார். அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம். யாரெல்லாம் கைது செய்ய தனிப்படை வைத்து தேடுகிறார்களோ? அதைபோல தாம்பரம் யாகூப்பை கைது செய்ய ஏன் கூடாது என்று நீதிமன்றத்தில் கேட்போம். எந்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவல் சொல்கிறாரோ... அவரிடம் நியாயத்தை கேட்போம். யார், யார் வேண்டுமானாலும் கொன்று விடுவோம் என்று மிரட்டலாமா? தனிப்பட்ட சண்டையில் கொலை நடப்பதாக பேட்டி கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மேடையில் ஒருவர் திமுக எம்எல்ஏக்கள் இருக்கும் போது சர்வசாதாரணமாக கொலை மிரட்டல் விடுப்பதை ஏன் அவர்கள் கண்டிக்கவில்லை?. இது நியாயமா? என்ற கேள்வியை முதல்வருக்கு முன் வைக்கிறேன்” என்று கூறினார்.