விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத கட்சி இல்லை என்று திமுகவினரே நினைக்குறாங்க- ஹெச்.ராஜா
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் காலை, மாலை பேசுகிறேன், அதனை உங்களிடன் கூற வேண்டுமா? ஒற்றுமையாக இருந்தாலும் சண்டை மூட்டி விட பார்கிறார்கள் என பாஜக மாநில ஒருங்கிணைபாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில ஒருங்கிணைபாளர் ஹெச்.ராஜா, “தமிழக ஆளுநர் மெத்தபடித்தவர், அவர் பொதுவெளியில் பேசிய பேச்சுக்கு பல்வேறு அர்த்தங்களை கூறி வருகிறார்கள். யாரை மந்திரியாக்க வேண்டும் என்பது முதலமைச்சர் விருப்பம். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியை மாநில அரசு முடிக்கட்டும், அதன்பின்னர் அத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் காலை, மாலை பேசுகிறேன், அதனை உங்களிடன் கூற வேண்டுமா? ஒற்றுமையாக இருந்தாலும் சண்டை மூட்டி விட பார்கிறார்கள்.
தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் கவலை அளிக்கிறது. மோகன் ஜி முறைகேடாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஒருவரை கைது செய்வதாக இருந்தால் என்ன காரணம் என்று சொல்ல வேண்டும்.. காவல்துறை நியாயமில்லாமல் செயல்படுவது கவலையளிக்கிறது. வி.சி.க. ஒன்றும் தவிர்க்க முடியாத அரசியல் கட்சி இல்லை என்று தி.மு.க.வினரே நினைக்குறாங்க.. அவர்களுக்குள் சண்டை இருப்பது நன்றாக தெரிகிறது” என்றார்.