பல கோடி மதிப்புள்ள சொத்தை தனது பெயருக்கு எழுதிதரச் சொல்லி மிரட்டிய பாஜக நிர்வாகி

 
சென்னை சூளைமேடு பகுதியில் சொத்தை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்க சொல்லி மிரட்டிய பாஜக நிர்வாகியை சென்னை போலிசார் கைது செய்துள்ளனர்.  சென்னை, சூளைமேடு, சித்ரா அவென்யூ பகுதியைச் சேர்ந்த மூர்த்தி(56) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மூர்த்தி, செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் பகுதியில் நிலங்கள் வாங்குவதற்கு கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் சிவகுமார் என்பவரிடம் 3 கோடி ரூபாய் பணம் கடனாக பெற்றுள்ளார். பாலூர் பகுதியில் 14.8 ஏக்கர் நிலம் வாங்கி, அதனை மேம்படுத்தி  வீட்டு மனைகளாக பிளாட் போட்டுள்ளார். பின்னர் மூர்த்தி அதனை விற்றுத்தரும்படி சிவகுமாரிடமே கேட்டுள்ளார். மேலும் விற்றுத்தர கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், சிவகுமார் முழு இடத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன்  4 பேரோடு சேர்ந்து, மூர்த்தியின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ஆபாசமாக திட்டி,  செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் பகுதியில் வாங்கியுள்ள 14.8 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு எழுதித்தரும்படி கேட்டு மிரட்டியுள்ளார்.   இது குறித்து மூர்த்தி,சூளைமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சூளைமேடு போலீசார் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் சிவகுமாரை(43) கைது செய்து விசாரணை செய்தனர்.மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சூளைமேடு பகுதியில் சொத்தை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்க சொல்லி மிரட்டிய பாஜக நிர்வாகியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, சூளைமேடு, சித்ரா அவென்யூ பகுதியைச் சேர்ந்த மூர்த்தி(56) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மூர்த்தி, செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் பகுதியில் நிலங்கள் வாங்குவதற்கு கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் சிவகுமார் என்பவரிடம் 3 கோடி ரூபாய் பணம் கடனாக பெற்றுள்ளார். பாலூர் பகுதியில் 14.8 ஏக்கர் நிலம் வாங்கி, அதனை மேம்படுத்தி  வீட்டு மனைகளாக பிளாட் போட்டுள்ளார். பின்னர் மூர்த்தி அதனை விற்றுத்தரும்படி சிவகுமாரிடமே கேட்டுள்ளார். மேலும் விற்றுத்தர கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், சிவகுமார் முழு இடத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன்  4 பேரோடு சேர்ந்து, மூர்த்தியின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ஆபாசமாக திட்டி,  செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் பகுதியில் வாங்கியுள்ள 14.8 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு எழுதித்தரும்படி கேட்டு மிரட்டியுள்ளார். 

சென்னை கிழக்கு மண்டல காவல் நிலையங்களை மாற்ற பரிந்துரை

இது குறித்து மூர்த்தி,சூளைமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சூளைமேடு போலீசார் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் சிவகுமாரை(43) கைது செய்து விசாரணை செய்தனர்.மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.