சேதமடைந்த அரசு பேருந்தில் பயத்துடன் இறங்கும் பயணிகள்! பாஜக சாடல்
“எமது கோபாலபுர வாரிசுகள் செல்வ செழிப்பில் வாழ்ந்தால் போதும்! சாமானிய மக்கள் எக்கேடு கெட்டாலும் - I don’t care!” - அப்படித்தானே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ““எமது கோபாலபுர வாரிசுகள் செல்வ செழிப்பில் வாழ்ந்தால் போதும்! சாமானிய மக்கள் எக்கேடு கெட்டாலும் - I don’t care!” - அப்படித்தானே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? பயணிகளின் பாதுகாப்பில் எந்தவொரு அக்கறையுமில்லாமல், மிகவும் பழுதடைந்த பேருந்துகளை அமைச்சர் திரு. சிவசங்கரின் தலைமையின் கீழ் செயல்படும் போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது. அதில் ஒன்றாக இந்த படி சேதமடைந்த அரசு பேருந்தில் பயணிகள் பயத்துடன் கீழே இறங்கும் நிகழ்வானது, தமிழக அரசுப் பேருந்துகளின் பரிதாப நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதுவே முக்கால் வாசி பேருந்துகளின் நிலையாக இருப்பது வேதனைக்குரியது.
“எமது கோபாலபுர வாரிசுகள் செல்வ செழிப்பில் வாழ்ந்தால் போதும்! சாமானிய மக்கள் எக்கேடு கெட்டாலும் - I don’t care!” - அப்படித்தானே முதல்வர் @mkstalin அவர்களே?
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 8, 2024
பயணிகளின் பாதுகாப்பில் எந்தவொரு அக்கறையுமில்லாமல், மிகவும் பழுதடைந்த பேருந்துகளை அமைச்சர் திரு. @sivasankar1ss-இன்… pic.twitter.com/OWIsFYOB4O
இதில் மேலும் வெட்கக்கேடு என்னவென்றால்… சிறுவர்கள், பெண்கள், முதியோர் என சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரசு பேருந்துகளின் தரத்தை உயர்த்த முடியாத இந்த திராவிட மாடல் அரசானது, ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களையும் பயன்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பந்தாவிற்காக, ஆடம்பரச் செலவு செய்து கார் ரேஸ்களை நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. எளிய மக்களின் வாழ்வைப் பற்றி என்று கருதும் இந்த திராபை மாடல் அரசு???” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.