’’பாஜக நெருக்கடி,போலீஸ் எதிர்ப்பை மீறி தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி’’

 
மே

 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி  தளத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று பேரும் கடந்த அக்டோபர் 19ஆம் தேதியன்று படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.   அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக சொல்லி அவர்களது ரோந்து கப்பல் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்துள்ளனர்.   இதில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கி இருக்கிறது. 

 சுகந்தன், சேவியர் இருவரையும் இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.  இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.  இதன் பின்னர் மீனவர்களை சர்வதேச எல்லையில் இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படை ஒப்படைத்தனர்.  பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ராஜ்கிரணை தனக்கும் உறவினர்கள் யாருக்கும் முழுவதும் திறந்து காட்டாமல் அடக்கம் செய்துவிட்டனர் என்று ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ட்ட்

இலங்கை கடற்படையால் ராஜ்கிரன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.   போட்டோவில் அவர் முகத்தில் காயங்கள் இருந்தன.  இதையடுத்து தமிழ்நாடு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.  உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்து எப்படி உயிரிழந்தார் என்பதனை கண்டறிய வேண்டும்.   உயர் காவல் அலுவலர் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 ராஜ்கிரன் மனைவி பிருந்தா தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி  முன்பு விசாரணைக்கு வந்தது.    விசாரணைக்கு பின்னர்,   நவம்பர் 18ஆம் தேதி தாசில்தார் மற்றும்  காவல்துறையினர் முன்னிலையில் கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மீனவர் உடலை மீண்டும் எடுத்து மறு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும்.  அரசு மருத்துவர்கள் சரவணன், செல்வகுமார் குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.    மனுதாரர் தரப்பில் ஓய்வு பெற்ற தடயவியல் அலுவலர் சேவியர் செல்வ சுரேஷ் மறு உடற்கூராய்வின்போது உடன் இருப்பார் என்று தெரிவித்திருந்தார்.

 மேலும் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்தாரா அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா என்பதை தெளிவுபடுத்துகின்ற வகையில் மறு உடற்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ட்ட்ட்

இந்நிலையில்,  ‘’மீனவர் ராஜ்கிரண் கொலைக்கு உடற்கூராய்வு செய்யவேண்டுமென உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. மே17 இயக்கம், விடுதலைதமிழ்புலிகள் நடத்திய போராட்டம், மக்கள் கண்காணிப்பகம் நடத்திய வழக்கு ஆகிய தொடர்போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி.

மீனவர் உடல் பரிசோதனை &வழக்கு பதிய மே17 இயக்கம் வழக்கு மதுரையில் பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அரசு வாதங்களை நிராகரித்து உடற்கூராய்விற்கு உத்திரவிட்டது முதற்கட்ட வெற்றியாகும். கோட்டைப்பட்டிணத்தில் பாஜகவின் நெருக்கடி, காவல்துறையின் எதிர்ப்பை மீறி மீனவருடன் போராட்டத்தில் நின்றது, இலங்கை தூதரகத்தை மே17 இயக்க தோழர்கள் உடனடியாக முற்றுகையிடப்பட்டதும் இக்கோரிக்கையை முன்னகர்த்த உதவியது. போராட்டமில்லாமல் நீதி என்பது சாத்தியமில்லை. தோழர்.குடந்தை அரசன், அரங்க குணசேகரன் ஆகியோரின் சமரசமில்லாத பங்களிப்பு இக்கோரிக்கையை வலுப்படுத்தியது. கொலை வழக்கை பதிவுசெய்யும் வரை தொடர்ந்து போராடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார் மே-17 இயக்கம் திருமுருகன் காந்தி.