இந்து மதம் அல்லாதவர்கள் ஏழுமலையானை தரிசிப்பதா? ஜெகன்மோகனுக்கு எதிராக பாஜக போர்க்கொடி

 
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி: உதயநிதியுடன் பங்கேற்ற ஸ்டாலின்!?

இந்து சனாதன தர்மத்தை மதித்து, அதன் மீது நம்பிக்கை உள்ளதாக கையெழுத்திட்ட பிறகே ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சுவாமியை தரிசிக்க அனுமதிக்க  வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

ஒய்.எஸ்.ஆரின் சகோதரர் கொலை; சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு!


திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக  முதல்வர் சந்திரபாபு நாயுடு பொய் கூறி அவதூறு பிரச்சாரம் செய்து இருப்பதாகவும்,  தேவஸ்தானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சந்திரபாபு  பிரச்சாரம் செய்ததால் அதன் கலங்கத்தை போக்க ஓய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அக்கட்சியின் தலைவர் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று ஏழுமலையானை வழிபட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Bhanu Prakash Reddy: ఓటమి భయం నేతల్లో స్పష్టంగా కనిపిస్తోంది: భాను ప్రకాశ్  రెడ్డి - NTV Telugu

இந்நிலையில்  பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி, திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அதிகாரி ஷியாமளா ராவை சந்தித்து, இந்து மதம் அல்லாதவர்கள் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு செல்லும்போது அங்குள்ள உறுதிமொழி பத்திரத்தில் நான் சனதன தர்மத்தை கெளரவித்து ஏழுமலையான் மீது மிகுந்த பக்தியுடன் சாமி தரிசனம் செய்வதாக கையெழுத்திட்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால் கடந்த காலங்களில் ஜெகன் மோகன் ரெட்டி அதனை கடைபிடிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் ஆட்சியில் பல முறைகேடு செய்து பிரசாத நெய்யில் கலப்படம் செய்த நிலையில் அவர் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என செயல் அதிகாரிகள் ஷியாமளா ராவுக்கு கோரிக்கை மனுவை வழங்கினர். ஜெகன்மோகன் தேவஸ்தான நிபந்தனையை கடைபிடித்து அவர் நடந்து செல்லட்டும் அல்லது அங்கபிரதட்சனம் செய்து செல்லட்டும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் பானுபிரகாஷ் ரெட்டி தெரிவித்தார்.