போதுமான அளவு காவலர்கள் இல்லாததே குற்றங்கள் அதிகரிக்க காரணம்- அண்ணாமலை

 
அண்ணாமலை

போதுமான அளவில், காவல்துறையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படாததால், காவல்துறையினர் மீதான பணிச்சுமை அதிகரிப்பதோடு, போதுமான அளவு காவலர்கள் இல்லாததால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, குற்றங்களும் அதிகரித்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

கல்வித் தரத்தை உயர்த்தவே ஆல்-பாஸ் முறை ரத்து: அண்ணாமலை

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆட்சிக்கு வந்ததும், மூன்று லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த நான்கு ஆண்டுகளில், வழக்கமான அரசுப் பணித் தேர்வுகளையே முறையாக நடத்தாமல், இளைஞர்களை வஞ்சித்து வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான, சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுகள் நடைபெறாததால், ஒரு ஆண்டு வீணாகியிருக்கிறது. இதனால், இளைஞர்களின் வயது உச்ச வரம்பு பாதிக்கப்பட்டுள்ளது. 


போதுமான அளவில், காவல்துறையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படாததால், காவல்துறையினர் மீதான பணிச்சுமை அதிகரிப்பதோடு, போதுமான அளவு காவலர்கள் இல்லாததால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, குற்றங்களும் அதிகரித்திருக்கின்றன. எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில், இளைஞர்களுக்கு, 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், தேர்வுகளுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.