“விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமா குழப்பத்தில் இருக்கிறார்”- அண்ணாமலை
இருமல் விவகாரத்தில் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமாவளவனின் எண்ண ஓட்டம் குழப்பத்தில் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக எனக் கூறும் திருமாவளவனின் அரசியல் தரம் தாழ்ந்து மாறியிருக்கிறது. தவறு செய்த பின் தப்பிக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக, அண்ணாமலை என பழிபோடுவதை நிறுத்த வேண்டும். ஸ்கூட்டர் மீது கார் இடித்ததாக கூறப்படும் சம்பவத்தில் தேவையின்றி திருமாவளவன் தன்னை இழுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து திருமாவளவன் விலக வேண்டும்.
இந்திய மருந்தியில் ஆணையம் நடத்திய பயிற்சி வகுப்பில் தமிழக Drug Controller கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் இதற்கான உரிய காரணத்தை விளக்க வேண்டும். காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் ஆய்வாளர்கள் 2 பேர் மட்டுமே கண் துடைப்புக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேல் மட்டத்தில் இருந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


