“யார் அந்த சார்?.. ரெக்கார்ட் என்கிட்ட இருக்கு... வெளியிட போறேன்”- அண்ணாமலை பரபரப்பு பேட்டி

எப்போதும் தமிழகத்தின் தோழனாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “எப்போதும் தமிழகத்தின் தோழனாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார். மண்ணின் மைந்தர்களுக்காக டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை பிரதமர் ரத்து செய்துள்ளார். ஈசிஆர் விவகாரத்தில் காவல்துறை அறிக்கை வேடிக்கையாகவுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் மீது தவறு இருப்பதுபோல காவல்துறை கூறுவது சரியல்ல. அனைத்து விஷயங்களிலும் தமிழக அரசு பொய் சொல்கிறது. பொய்யான அறிக்கையை கொடுத்து காவல்துறை எத்தனை முறை அவர்கள் முகத்திலேயே கரியை பூசிக் கொள்வார்கள்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் ஞானசேகரனின் செல்போன் அழைப்பு விவரங்கள் என்னிடம் உள்ளது. ஓராண்டு காலம் அவர் யார், யாருடன் எல்லாம் பேசினார் என்கின்ற ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அண்ணா பல்கலை மாணவி வழக்கில் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை காவல்துறை வெளியிடாவிட்டால், நானே வெளியிடுவேன். குற்றச்சம்பவம் நடந்த அன்று ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்ற விவரங்கள் என்னிடம் உள்ளது. நீங்க கருப்புக்கொடி காட்டுறதுனால அமித்ஷா பயந்துடுவாரா என்ன?... கருப்புக்கொடி மட்டும் இல்ல வேற எதனா வேணும்னா கூட சொல்லுங்க என் கை காசு போட்டு வாங்கி தரேன்” என்றார்.