”மிகமிக மகிழ்ச்சியான செய்தி நாளை அதிகாரபூர்வமாக வரும்”- அண்ணாமலை

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஜன.23 மகிழ்ச்சியான தகவல் வரும், அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிசான் ரெட்டியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “டங்ஸ்டன் சுரங்கம் வராது என்ற உறுதிமொழியை பாஜக நிறைவேற்றும். போராட்டக்குழுவினருக்கு மத்திய அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். தன்னை நம்பிய மக்களை பிரதமர் கைவிடவில்லை. பாஜக தான் விவசாயிகளின் உண்மையான நண்பன். டங்ஸ்டன் ஆலையை அரிட்டாப்பட்டியில் செயல்படுத்த மாட்டோம் என மத்திய அமைச்சகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவ்ப்பு நாளை நிச்சயம் வரும். அரிட்டாப்பட்டி மக்களுக்கு நாங்கள் கொடுத்த உறுதிமொழியை தமிழக பாஜகவின் கடும் முயற்சியினால் காப்பாற்றியிருக்கிறோம்” என்றார்.