“அதிகமா பட்டாசு வாங்கி வெடிக்கணும்” - அண்ணாமலை வேண்டுகோள்!

 
annamalai

பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம் ஆகவே அனைவரும்அதிகமாக பட்டாசு வாங்கி வெடிக்கணும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tamil Nadu: Annamalai gets BJP's nod for UK fellowship, dismisses  leadership change rumours - Tamil Nadu News | India Today

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,“பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம். நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 


மத்தாப்புக்களின் வெளிச்சம் போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.