ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம்

 
Briyani

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஆம்பூர் பிரியாணிக்கடை இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Tomato biryani and salad Photograph by Paul Cowan

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி கடையில் இன்று அதிரடி ஆஃபர் அறிவித்து விற்பனை செய்யப்படுகிறது. முழு பிரியாணி இரண்டு வாங்கினால்  அரை கிலோ தக்காளி இலவசம் என்றும், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு  பிரியாணி இலவசம் என்றும் அறிவித்து விற்பனை செய்துவருகிறது. இந்த சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தால் அழிந்து வரும்  விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆப்பர் வழங்கப்படுவதாகவும், இப்போது தக்காளி விலை பெட்ரோல், டீசல் மற்றும் தங்கத்தைவிட நாளுக்கு நாள் விலை உயர்ந்துவருவதால் அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டதாக அந்த கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.