பல்கலை.களில் பயோமெட்ரிக் - உயர்கல்வித்துறை அதிரடி

 
பயோமெட்ரிக்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பயோமெட்ரிக் வருகைப்பதிவில் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்த, உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், பேராசிரியர்கள், மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

பேராசிரியர்கள் தாமதமாக வருவதும், அனுமதியின்றி வெளியே செல்வதும் கவனத்திற்கு வந்துள்ளதாக கடிதத்தில் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பேராசிரியர்கள், மாணவர்களிடையே நல்லிணக்கம் இல்லாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்டவற்றிலும் ஈடுபடும் சூழல் உள்ளதால், பயோமெட்ரிக் முறை அவசியம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.