பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்த்தப்படும்! பாரத் பெட்ரோலியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு. பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்துவது தவிர்க்க முடியாதது என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் , உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மேலும் உயர்த்துவது "தவிர்க்க முடியாதது" என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட இந்த அதிரடி நடவடிக்கை விரைவில் பாயவுள்ளதாகத் தெரிகிறது.தற்போது பிபிசிஎல் நிறுவனமே "விலை உயர்வு தவிர்க்க முடியாதது" என்று கூறியிருப்பதால், இந்தியன் ஆயில் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகிய நிறுவனங்களும் அடுத்த சில தினங்களில் விலையை உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

