வரும் 20 ஆம் தேதி வரை திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல தடை!

 
tiruvannamalai deepam

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று பிற்பகல் 1 மணி முதல் வருகிற 20-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கோவிலுக்குள் பக்தர்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

திருவண்ணாமலை மகா தீபம் மற்றும் பரணி தீபம்... பக்தர்களுக்குத் தடை!  கட்டுப்பாடுகள் என்னென்ன? | Thiruvannamalai temple to follow strict norms  for deepam celebrations this year

திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை கோவிலுக்குள் நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படவுள்ளது. அதனை தொடர்ந்து அன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனால் இன்று 17 ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல்  வருகிற 20-ஆம் தேதி வரை உள்ளூர், வெளிமாவட்ட, மாநில, வெளிநாட்டு பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் செல்லவும் , கிரிவலம் செல்லவும் , மலை ஏறவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்வேறு மாவட்டம் மாநிலங்களில் இருந்து ஆன்மீக பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.. இதற்காக திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.