" விஜய் சைலண்டா ஒரு வார்த்தை சொன்னாலே பயங்கரமா வெடிக்குதே"- தாடி பாலாஜி

 
தாடி பாலாஜி

அம்பேத்கரை அவமரியாதையாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தவெக கட்சித் தலைவர் விஜய் முடிவெடுக்கவில்லை என டிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.


வடசென்னை மாவட்டம் தவெக  சிறுபான்மையினர் பிரிவின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. எண்ணூர் எர்ணாவூர் மேம்பாலம் அருகே  தவெக நிர்வாகி சாமுவேல் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நடிகரும் தவெக நிர்வாகியமான தாடி பாலாஜி கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினார். துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தாடி பாலாஜி, “அம்பேத்கரை அவமரியாதையாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தவெக  கட்சித் தலைவர் விஜய் முடிவெடுக்கவில்லை. அவர் முடிவு எடுத்தால் நாங்கள் செய்வதற்கு தயாராக இருப்போம். அவர் சைலண்டா ஒரு விஷயம் சொன்னால் பயங்கரமாக வெடிக்கிறது. விஜய் பேச வேண்டிய இடத்தில் கரெக்டாக பேசுவார். தவெக கட்சித் தொண்டர்கள் தனித்தனியாக இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கைகள் இணைந்தால் வலுப்பெறுவது போல் தனித்தனியாக செயல்படாமல் நிர்வாகிகள்,
தொண்டர்கள் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.


ஒருவர் வராரு வராரு வராரு சொல்லிட்டு வர மாட்டாரு... ஆனால் விஜய் வந்துட்டாரு, கொடி அறிமுகப்படுத்திட்டாரு, மாநாடு நடத்திட்டாரு, ஒவ்வொரு விஷயமாக செய்து வருகிறார். நடிகராக இருந்த விஜய் சினிமாவில் மறைமுகமாக பஞ்ச் டயலாக் பேசுவார், இப்பொழுது அரசியலுக்கு வந்த பிறகு நேரடியாக பஞ்ச் டயலாக் பேசுகிறார். விஜய் கண்டிப்பாக மாற்றுத்தலைவராக இருப்பார். 
நான் பதவிக்காக வரவில்லை, என் உயிர் இருக்கும் வரை அவருக்காக உழைப்பேன், அதற்காகவே நெஞ்சில் அவரை பச்சை குத்தி வைத்துள்ளேன். மற்ற நடிகர்கள் எப்படி என்று தெரியவில்லை? நான் துணிந்து வந்து விட்டேன். எனக்கு விஜய் அதிகமான உதவி செய்திருக்கிறார். நன்றி விசுவாசம், அதை தாண்டி விஜய் வந்தா நல்ல நிறைய விஷயம் செய்வார்” என்றார்.