சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் வெட்டி படுகொலை

 
d

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் வெட்டி படுகொலை

சென்னை அடு்த்த செம்பியம் பகுதியை சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் பெரம்பூரில் வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது அவரை பின் தொடர்ந்த, 6  பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரோடு நின்று கொண்டிருந்த இருவர் படுகாயமடைந்தனர்.


இது குறித்து தகவல் அறிந்த செம்பியம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரம்பூர் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடத்தப்பட்டதா அல்லது அரசியல் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.