ஆயுத பூஜை பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்... களைகட்டிய விற்பனை..!!
நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நவராத்திரி விழாவின் 9வது மற்றும் கடைசி நாள் ஆயுத பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். ஆயுத பூஜையுடன் தான் இந்த நவராத்திரி விழாவும் நிறைவு பெறும். தேர்வர்களுக்கும், மக்களுக்கும் தொல்லை கொடுத்து வந்த அசுரர்களை துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளும் 9 நாட்கள் கடுமையாக தவமிருந்து அழித்ததாக ஆன்மீக வரலாறுகள் கூறுகிறது. அதன்படி, முப்பெரும் தேவிகளும் தவம் புரிந்த நாட்கள் தான் நவரத்திரியாக கொண்டாடப்படுகிறது. அதில் 9ம் நாளான இன்று அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் ஆயுதங்களை பெற்று, அதனை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். அதுவே ஆயுத பூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் நாம் பயன்படுத்தும் , நம் வாழ்வில் நமக்குதவியாக இருக்கும் ஆயுதங்களையும், நம் வாழ்வை வளமாக்கும் கல்வி சார்ந்த உபகரணங்களையும் வைத்து வழிபடுவர். உதாரணமாக நாம் பயனபடுத்தும் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், பேருந்து என அவரவர் பயன்படுத்தும் வாகனங்களை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவர்.
இதேபோல் எலக்ட்ரிக்கல் வேலை செய்வோர், அச்சுத்தொழில், கடைகள், தொழிற்சாலை , சிறு- குறு நிறுவனங்கள் தொடங்கி தாங்கள் செய்யும் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று அனைவருமே ஆயுத பூஜை கொண்டாடுவர். இதெபோல் பெண்களும் வீட்டில் பயனபடுத்தும் கத்தி , அரிவால், மன்வெட்டி, கடப்பாரை, மிக்சி, ஃப்ரிட்ஸ் போன்ற பொருட்களுக்கு பூஜை செய்வர். இதேபோன்று மாணவர்களும் தங்களுடைய ஆயுதமான புத்தங்கள், எழுதுகோல்களுக்கு பொட்டு வைத்து, பூஜையில் வைத்து வழிபடுவது சரஸ்வதி பூஜையின் ஒரு அங்கமாகும்.
வீடு முழுவதும் சுத்தம் செய்து வாசல் கதவு, ஜன்னல்கள், அலமாரிகள், சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலை தோரணம் கட்டி வீட்டை அலங்கரிப்பர். பின்னர் விளக்கேற்றி, வாழை இலையில் சுண்டல், பொரிக்கடலை, வெற்றிலைப்பாக்கு, வழை உள்ளிட்ட பழங்கள் வைத்து சாமிக்கு படைப்பர். இவ்வாறாக ஆயுத பூஜை விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சந்தைகளில் பூக்கள், காய்கனிகள், வாழை மரங்களின் விற்பனை களைகட்டியுள்ளது.