வீடுகளில் நூலகம் வைத்திருப்போருக்கு விருது- விண்ணப்பிக்க அரசு அழைப்பு

 
s

சென்னை மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Koogai library in Chennai, set up by directors like Pa Ranjith, is  encouraging filmmakers to read

தமிழக அரசு, வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு தோறும் நூலகங்கள் அமைத்து பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விருது வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால். சென்னை மாவட்டத்தில் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தனிநபருக்கு மாவட்டங்களில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் சொந்த நூலகங்களுக்கு விருது. ரூ.3,000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர். தங்களது வீட்டில் உள்ள நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன, எந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் விவரம் என்பன உள்ளிட்ட விவரங்களுடன், பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு dlochennai@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும், கீழ்க்காணும் மாவட்ட நூலக அலுவலக முகவரிக்கும் விண்ணப்பக்கலாம் என மாவட்ட நூலக அலுவலரால் தெரிவிக்கப்படுகிறது.