பெங்களூரு பொறியாளர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கு- மனைவி உட்பட 3 பேர் கைது

 
s

பெங்களூரைச் சேர்ந்த அதுல் சுபாஷ் தனது மனைவியால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது மனைவி உட்பட பேர் 3 கைது செய்யப்பட்டனர்.

அதுல் சுபாஷ் பெங்களூரு போலீஸ்

பெங்களூரில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ் (34) தன் மனைவி நிகிதா சிங்கானி, அவரது பெற்றோர் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து துன்புறுத்துவதாக கூறி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து 24 பக்க கடிதமும், 90 நிமிட வீடியோவும் பதிவு செய்து வெளியிட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

Image

இந்நிலையில் இந்த வழக்கில் அதுலின் மனைவி நிகிதா சிங்கானியா ஹரியானா மாநிலம் குருகிராமில் கைது செய்யப்பட்டார். மேலும் அதுல் சுபாஷை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் 3(5) (பொது நோக்கத்துடன் குற்றச் செயல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அதுல் மீதான வழக்குகளை வாபஸ் பெற ரூ.3 கோடியும், அவரது மகனை பார்க்க வருவதற்கு ரூ.30 லட்சமும் கொடுப்பதாக அதுலின் மனைவி கூறியதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.