தமிழ்நாடு ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகத்தில் உதவியாளர் வேலை..!

 
1 1
Description Details
வேலை பிரிவு மத்திய அரசு வேலை 2025
துறைகள் GST & Central Excise Chennai
காலியிடங்கள் 20
பணிகள் Tax Assistant, Stenographer, Havaldar, MTS
விண்ணப்பிக்கும் முறை Online மூலம்
கடைசி தேதி 07.01.2026
பணியிடம் Tamil Nadu & Puducherry 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://gstchennai.gov.in/

தமிழ்நாடு ஜிஎஸ்டி (GST) மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகத்தில், விளையாட்டு வீரர்களுக்கான (Sports Person Quota) ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 20 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

பணியிடங்களின் விவரம்:

  • வரி உதவியாளர் (Tax Assistant)
  • சுருக்கெழுத்தர் (Stenographer)
  • ஹவால்தார் (Havaldar)
  • பல்நோக்கு உதவியாளர் (MTS)

எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
Tax Assistant (வரி உதவியாளர்) 11
Stenographer Grade – II (சுருக்கெழுத்தாளர் தரம் – II) 01
Havaldar (ஹவால்தார்) 07
Multi-Tasking Staff (MTS) (பல்நோக்கு உதவியாளர்) 01
மொத்தம் 20

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Tax Assistant (வரி உதவியாளர்) ஏதாவது ஒரு பட்டம் (Any Degree)
Stenographer Grade – II (சுருக்கெழுத்தாளர் தரம் – II) 12-ஆம் வகுப்பு தேர்ச்சி (12th Pass)
Havaldar (ஹவால்தார்) 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (Matriculation/10th Pass)
Multi-Tasking Staff (பல்நோக்கு உதவியாளர்) 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (Matriculation/10th Pass)

விளையாட்டிற்கான தகுதிகள் (Sports Eligibility Criteria)

விண்ணப்பதாரர்கள் பின்வரும் விளையாட்டுகளில் பங்கேற்றிருக்க/பதக்கங்களை வென்றிருக்க வேண்டும்:

  • ஆண்கள்: கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, கைப்பந்து (Volleyball)
  • ஆண்கள்/பெண்கள்: தடகளம் – ட்ராக் & ஃபீல்ட் (Athletics), நீச்சல் (Swimming)

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றதற்கான தகுதிகள்:

  • சர்வதேசப் போட்டி (International Competition) – நாட்டில் பிரதிநிதித்துவம் வகித்தவர்கள்/பதக்கங்கள் வென்றவர்கள்.
  • தேசியப் போட்டி (National Competition) – மாநிலத்தில் பிரதிநிதித்துவம் வகித்தவர்கள்/பதக்கங்கள் வென்றவர்கள்.
  • பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டி (Inter-University Competition) – பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்றவர்கள்.
  • தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகள் (National Level Sports/Games for School Teams) – அத்துடன் தேசிய செயல்திறன் இயக்கத்தின் கீழ் (National Efficiency Drive) உடல் திறன் விருதுகளை வென்றவர்கள்.
  • கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் (Khelo India Games): Khelo India University Games / Youth Games / Winter Games / Para Games ஆகியவற்றில் பங்கேற்றவர்கள்.

வயது வரம்பு விவரங்கள் :

பதவியின் பெயர் வயது வரம்பு
Tax Assistant (வரி உதவியாளர்) 18 முதல் 27 வயது வரை
Stenographer Grade – II (சுருக்கெழுத்தாளர் தரம் – II) 18 முதல் 27 வயது வரை
Havaldar (ஹவால்தார்) 18 முதல் 27 வயது வரை
Multi-Tasking Staff (பல்நோக்கு உதவியாளர்) 18 முதல் 25 வயது வரை

வயது வரம்பு தளர்வு (Upper Age Limit Relaxation)

வகை வயது தளர்வு
SC / ST விண்ணப்பதாரர்கள் +5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள் +3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்கள் +10 ஆண்டுகள்
PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்கள் +15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் +13 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) அரசு கொள்கையின்படி

சம்பள விவரங்கள் :

பதவியின் பெயர் சம்பள விகிதம்
Tax Assistant (வரி உதவியாளர்) ரூ.25,500/- முதல் ரூ.81,100/-
Stenographer Grade – II (சுருக்கெழுத்தாளர் தரம் – II) ரூ.25,500/- முதல் ரூ.81,100/-
Havaldar (ஹவால்தார்) ரூ.18,000/- முதல் ரூ.56,900/-
Multi-Tasking Staff (பல்நோக்கு உதவியாளர்) ரூ.18,000/- முதல் ரூ.56,900/-

தேர்வு செயல்முறை : 

  • குறுகியப் பட்டியல் (Short Listing)
  • விளையாட்டுப் போட்டித் தேர்வு (Sports Trial) / மருத்துவப் பரிசோதனை (Medical Test) / சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

முக்கியமான தேதிகள்:

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 08.12.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள்: 07.01.2026

எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 08.12.2025 முதல் 07.01.2026 தேதிக்குள் https://gstchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.