ஆம்ஸ்ட்ராங் கொலை - ஆற்காடு சுரேஷ் மனைவி கைது

 
ஆம்ஸ்ட்ராங் கொலை - ஆற்காடு சுரேஷ் மனைவி கைது

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய  கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 23 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருக்கிறனர். 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். பொன்னை பாலுவுக்கு ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி ரூ.1.5 லட்சம் வழங்கியதாக தெரிகிறது. ஆந்திராவில் பதுங்கியிருந்த பொற்கொடியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கொலைக்கு திட்டம் தீட்டியதில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு செப்டம்பர் 2- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி  உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.