தீபாவளி ஷாப்பிங்க்கு தி.நகர் போறீங்களா??.. அப்போ வாகனத்தை இங்கே பார்க் செய்யலாம்.!!

தீபாவளி ஷாப்பிங்க்கு தி.நகர் போறீங்களா??..  அப்போ வாகனத்தை இங்கே பார்க் செய்யலாம்.!!

மேம்பால பணிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்ட உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த மாநகராட்சி அனுமதியளித்துள்ளது.  

தீபாவளி ஷாப்பிங்க்கு தி.நகர் போறீங்களா??..  அப்போ வாகனத்தை இங்கே பார்க் செய்யலாம்.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை வாங்க அதிகளவிலான மக்கள்  தி.நகருக்கு படையெடுத்துள்ளனர். அதேநேரம் அங்கு  போதிய 'பார்க்கிங்' வசதியில்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்  மேம்பால பணிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில், வாகனங்களை நிறுத்த மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. 

தீபாவளி ஷாப்பிங்க்கு தி.நகர் போறீங்களா??..  அப்போ வாகனத்தை இங்கே பார்க் செய்யலாம்.!!

உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த, வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,  மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில், 70 கார்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் வரை நிறுத்தும் வகையில் இடவசதி உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.