அப்பு பிரியாணி கடைக்கு அடுத்த ஆப்பு- பாலியல் புகாரில் ஊழியர்கள் கைது
சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள பிரபல அப்பு பிரியாணி கடை, தரமற்ற உணவு தயாரித்த விவகாரத்தில் நேற்று சீல் வைக்கப்பட்ட நிலையில், 15 வயது சிறுமிக்கு சில்மிஷம் அளித்த புகாரில் அக்கடையின் ஊழியர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதியில் அப்பு பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. அப்பு பிரியாணி கடைக்கு சென்னை திருவேற்காடு, அயனம்பாக்கம் பகுதியில் உள்ள அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்தில் இருந்து பிரியாணி தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தக் கடையில் பிரியாணி மற்றும் உணவுகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், சமையலறை உள்ளிட்ட பகுதிகள் சுகாதாரமற்ற இருப்பதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் இந்த கடை மீது கூறப்பட்டு வந்தது. அதேபோல் உணவு பாதுகாப்பு சான்று மற்றும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள பிரபல அப்பு பிரியாணி கடைக்கு நேற்று சீல் வைக்கப்படது.
இந்நிலையில், 15 வயது சிறுமிக்கு சில்மிஷம் அளித்த புகாரில் அப்பு பிரியாணி கடையின் ஊழியர்கள் இருவர் கைதாகியுள்ளனர். நேற்று முன்தினம் பிரியாணி வாங்க வந்த சிறுமியிடம் கடையில் வேலை செய்யும் மதன் என்பவர் தொல்லை செய்ய, அச்சிறுமி தனது சித்தப்பாவிடம் கூறியுள்ளார். சிறுமியின் சித்தப்பா கடைக்கு வந்து இதுகுறித்து கேட்க, கடையின் மேலாளர் கிஷோர் மற்றும் மதன் இருவரும் இணைந்து அவரை தாக்கியுள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் கிஷோர், மதன் இருவரையும் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.