"அ.தி.மு.க கொறடா யார்? 4 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" - சபாநாயகருக்கு அப்பாவு கேள்வி

 
அப்பாவு

தற்போது அதிமுக கொறடா திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ அவர்களா? அல்லது திரு விஜயபாஸ்கர் எம்எல்ஏ அவர்களா? என சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்பாவு


இதுதொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க 13.05.2026 பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கட்சி கொறடா உத்தரவையும் மீறி  ஆதரித்து வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏ-க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமு கழக பொதுச்செயலாளர் அவர்கள் மாண்புமிகு சபாநாயகர் அவர்களிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 25 சட்டமன்ற உறுப்பினர்களில் 21 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொடுத்த மன்னிப்பை ஏற்று தகுதி நீக்கத்தை ரத்து செய்ததாக மாண்புமிகு பேரவை தலைவர் அறிவித்துள்ளார்கள். அதே புகார் மனுவில் கூறப்பட்ட மீதி 4 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் உட்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு வேலுமணி அவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தற்போது அதிமுக கொறடா திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ அவர்களா? அல்லது திரு விஜயபாஸ்கர் எம்எல்ஏ அவர்களா? அறிவிப்பு சரியா, அறிவிக்கையாக, notification-ஆக வெளியிடப்பட வேண்டாமா? திரு. எடப்பாடி condon மட்டுமே செய்துள்ளார். தகுதிநீக்க மனுவை திரும்பபெறவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.