பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்- ஐகோர்ட் உத்தரவு
இருதரப்பு மோதலில் பாடகர் மனோவின் இரு மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த 10 ஆம் தேதி வளசரவாக்கம் ஸ்ரீதேவி நகரில் உணவு வாங்க வந்த இருவரை பாடகர் மனோவின் இரு மகன்கள் ஜாகிர் ரபீக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இதை அடுத்து வளசரவாக்கம் காவல்துறையினர் ஜாகிர், ரபீக் அவரது வீட்டில் வேலை செய்து வந்த தர்மா விக்னேஷ் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதில் தர்மா விக்னேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பாடகர் மனோவின் இரு மகன்கள் ரபீக் ஜாகீர் ஆகியோரை தேடிவந்தனர்.
இதனிடையே பாடகர் மனோவின் மனைவி ஜமிலா தனது மகன்களை 10-க்கும் மேற்பட்டோர் தாக்கியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு இருமகன்களையும் 10-க்கும் மேற்பட்டோர் தாக்கும் காட்சியை வெளியிட்டனர். இதையடுத்து மனோவின் தாக்கிய 8 பேர் மீது வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பாடகர் மனோவின் இரு மகன்களும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. அதேபோல் அவரது வீட்டில் வேலை செய்து வந்த தர்மா,விக்னேஷ் ஆகிய இருவருக்கும் பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.