ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது

 
ஆம்ஸ்ட்ராங் கொலை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 8 பேர் சரண்... ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழி  கொலையா?! | BSP leader murder case, 8 surrender in chennai - Vikatan

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்,  கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.  

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க  போலீஸார் மனு | Police request to take custody of all 11 arrested in  Armstrong's murder case - hindutamil.in

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் சிவா தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை தேடும் சம்போ செந்திலுக்கு 
சிவா பணம் கொடுத்ததை காவல்துறையினர் உறுதி செய்தனர்.எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவா, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிவா உடன் இதுவரை 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.