சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யா மீது மேலும் ஒரு வழக்கு

 
ர்ந்

சிறையிலுள்ள ரவுடி பேபி சூர்யா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

டிக்டாக் மற்றும் யூ டியூப் மூலம் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி இருக்கும் ரவுடி பேபி சூர்யா அவரது ஆண் நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தர் இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் .   இவர்கள் ஆபாசமாக பேசுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னையில் பெண்கள் குழு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.   மேலும் கோவை பெரியநாயக்கன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் ட் ஆபாசமாக தகாத முறையில் தன்னை பேசியதாகவும் புகார் அளித்திருந்தார்.

 இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யா அவரது நண்பர் சிக்கந்தர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரவுடி பேபி சூர்யா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ச்

 மதுரை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார்,   மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்திருந்த அந்த புகார் மனுவில்,   மதுரையில் வசித்த ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆபாச பேச்சுக்களை பேசி வந்தனர்.   தேசியகீதத்தை தவறாகவும் பாடினர்.  அதனால் இவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.   இந்த மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.

 இதையடுத்து மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கறிஞர் முத்துக்குமாரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.  வழக்கறிஞர் குமார் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முன்பு ஆஜராகி விசாரணையில் ஆவணங்களை ஒப்படைத்தை அடுத்து சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.