நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கோரினார் அன்னபூர்ணா சீனிவாசன்..

 
அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கோரினார்.

GST குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கோரினார். 

கோவை கொடிசியாவில்  தொழில்துறையினருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது.   இதில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமனிடம் புகார் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  அவர் கேட்ட கேள்வியில், “எங்களுக்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. உங்க பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அம்மா ( எம்எல்ஏ வானதி சீனிவாசன்) ரெகுலர் அன்னபூர்ணா கஸ்டமர். அவங்க வரும்போதெல்லாம் சண்டை போடுறாங்க. எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து ..  ஸ்வீட்டுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ளது. அதற்கு இன்புட் உள்ளது.  காரத்திற்கு 12% சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ளது. அதற்கு இன்புட் கிடையாது.  பேக்கரியில் பிரெட், பண்ணு தவிர எல்லாவற்றிற்கும் 28 % வரி உள்ளது. 

அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கோரினார்.

இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க.. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிர்க்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவிகிதம் வரி என்றால் சண்டை போடுவாங்க. ஒரே பில்லில்.. ஒரு குடும்பத்திற்கு வேறு வேறு ஜிஎஸ்டி போட முடியவில்லை. ஒரே பில்லில் வேறு வேறு பொருட்களுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி போட கம்ப்யூட்டரே திணறுகிறது. இதை பார்த்து கஸ்டமர்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு  ஜிஎஸ்டி இல்லை.. ஆனால்  உள்ளே இருக்கும் கிரீமிற்கு 28% ஜிஎஸ்டி  வைத்துள்ளனர். கஸ்டமர்கள்.. நீ பன்ணு கொடு.. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். கடை நடத்த முடியல மேடம்.. 

குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள்.. இல்லை எல்லாவற்றிற்கும் அதிகரியுங்கள். வடநாட்டில் அதிகம் சுவீட் சாப்பிடுகிறார்கள்.. அதனால்தான் அங்கே இணைப்பிற்கு ஜிஎஸ்டி கம்மி.. காரம் சாப்பிடுவதில்லை. அதனால் அதற்கு ஜிஎஸ்டி அதிகம் என்று உங்கள் எம்எல்ஏ வானதி சீனிவாசன்தான் கூறுகிறார். அப்படியா? நான் அப்படி எல்லாம் இல்லை என்றேன். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள்” என்று தெரிவித்திருந்தார். 

அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கோரினார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், நேற்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.  மேலும், தான் எந்தக் கட்சியையும் சாராதவர் என விளக்கமளித்திருக்கிறார்.  கிண்டல் தொனியில் புகார் தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் மன்னிப்புக் கோரியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.  மக்களின் நியாயமான  பிரச்சனையை கூறியதற்கு மன்னிப்புக் கேட்கவைத்திருப்பது, பாசிசத்தின் உச்சம் என நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.   அதிகார உச்சத்தின் அழுத்தத்தால் சீனிவாசன் மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். 


 


 

null