லண்டனில் இருந்தபடியே கட்சி பணிகளை கவனிக்க உள்ள அண்ணாமலை

 
 அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் செல்வதால் தலைவர் மாற்றப்படுவார் என தகவல் வெளியானது.

Annamalai

உயர்க்கல்விக்காக பிரிட்டன் சென்று சர்வதேச அரசியல் குறித்த படிப்பில் அண்ணாமலை பங்கேற்கிறார். 12 அரசியல் தலைவர்களை படிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. வகுப்புகள் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு ஒரு வாரத்துக்கு  முன்பே அண்ணாமலை லண்டன் செல்கிறார். லண்டன் செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.  தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை ஆறு மாத காலம் லண்டனில் தங்கியிருந்தால் கட்சி பணிகள் தொய்வடையும் . எனவே தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 4 மாதங்கள் லண்டனில் தங்கி படித்தபடியே தலைவர் பணிகளை கவனிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.