பாதிக்கப்பட்ட மாணவிக்காக போராடிய மாணவர்களை கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு- அண்ணாமலை

 
அண்ணாமலை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்காக நீதி கேட்டு போராடினால் கைது செய்வதா? திமுக அரசின் இந்த அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின் நிர்வாகிகளை, ஏபிவிபி மாநில அலுவலகத்திற்குள் அத்துமீறி, இன்று அதிகாலை 4 மணி அளவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுக அரசின் இந்த அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், அவரைக் காப்பாற்றும் நோக்கில், பாதிக்கப்பட்ட மாணவிக்காகப் போராடிய மாணவர்களைக் கைது செய்திருப்பது, திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு.  பாதிக்கப்பட்ட மாணவிக்காகப் போராடிய, ஏபிவிபி மாணவர்கள் மீதான நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.