ஓட்டு பிச்சை எடுப்பது எப்படி என சீமானிடம் கற்றுக்கொள்ள வேண்டும் - அண்ணாமலை
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்த தமிழக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திருமாவளவன் மாதிரி வாக்கு பிச்சை எடுக்க முடியாது. ஓட்டு பிச்சை எடுப்பது எப்படி என சீமானிடம் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வழியில் அரசியல் செய்ய எங்களுக்கு தெரியும். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று கோவை குண்டுவெடிப்புக்காக பாட்ஷா மைசூரில் இருந்து வெடிமருந்து வாங்கிவந்தார். குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சீமான், தனியரசு, திருமாவளவன் வாக்கு அரசியல் செய்கின்றனர். கோவை மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். கோவை பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். 2003-ல் மோடி கொல்லுவேன் என பாட்ஷா மிரட்டினார். அதன் பின் பிரதமர் பல முறை கோவை வந்து ரோடு ஷோவே செய்துவிட்டார். கிருஸ்துமஸ் வந்தால் பூதம் கிளம்பும், உதயநிதி தன்னை கிருஸ்வர், இஸ்லாமியர் என கூறுவார். ஒரு முறை நானும் இந்து என கூறுங்கள்.
மென்மையாகவும் பொறுமையாகவும் இருக்கும் பாஜக காரர்களை கோழை என்று நினைக்க வேண்டாம். எங்களுக்கும் ஆயுதம் எடுக்க தெரியும். எங்கள் தொண்டர்களை நாங்கள் கட்டி காத்து வருகிறோம், அவர்கள் உணர்வுகளோடு விளையாட வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.