அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகல்?- அண்ணாமலை அதிரடி

 
Annamalai

3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது பிரதமர் மோடியின்  பெருந்தன்மையை காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

We Don't Need Jamaat's Permission: Annamalai Responds To Muslim Body's Ban  On BJP's Entry Into

சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு இன்று முதல் பெறப்படுகிறது. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டு தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்பமனு பெற்று வருகிறோம், 536 பேர் சென்னை மாநகராட்சி சார்பில் போட்டியிட மனு அளிக்கப்பட்டுள்ளது.  இன்னும் தேர்தல் தேதி அறிவிக்காததால், தனித்து போட்டியா, கூட்டணி அறிவித்து போட்டியா என்பது முடிவுசெய்யப்படும் 

அதிமுகவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்வதாகவும், தேர்தல் நாள் நெருங்கியதும் கூட்டணி அறிவிக்கப்படும். போட்டியிடக்கூட ஆள் இல்லை என்று மருத்துவர் ராமதாஸ் கூறிய கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் சொன்னது சொன்னபடி வாபஸ் வாங்கிக் கொள்வார். உச்சநீதிமன்றத்திற்கு சென்று வெற்றி பெற்ற சட்டம்தான் நீட் சட்டம். நீட் யாருக்கும் எதிரான சட்டமல்ல. எனவே வ்நீட் தேர்வு தொடரும். நீட் தேர்வு சாதாரண மாணவர்களுக்கு வர பிரசாதமாக உள்ளது.

விவசாய சட்டத்தை வாபஸ் பெறுவோம் என பிரதமர் மோடி சொன்னது, அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. விவசாயிகள் மீது தடியடி நடத்தியது மோடி தான் காரணம் என கூறுவது நியாயமில்லாதது. கரூரில் நடந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கபடுவார்கள். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.