வீரத்தின் விளைநிலம் மாவீரர் நேதாஜியின் புகழை போற்றி வணங்குவோம் - அண்ணாமலை
Updated: Jan 23, 2025, 10:09 IST1737607163007

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராக, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பிறந்த தினம் இன்று. தமது பேச்சாலும், எழுத்துக்களாலும், செயல்பாடுகளாலும், எண்ணற்ற இளைஞர்களைச் சுதந்திரப் போரில் ஈடுபடச் செய்தவர். எந்தச் சூழ்நிலையிலும், ஆங்கிலேய அரசுக்கு அடிபணியாமல், நிபந்தனையற்ற தேசவிடுதலையே நோக்கமாகக் கொண்டிருந்தவர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய மக்களின் பேரன்பைப் பெற்றவர். வீரத்தின் விளைநிலம் மாவீரர் நேதாஜி அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என குறிப்பிட்டுள்ளார்