அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் - அண்ணாமலை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தியும், புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் பலரும் கிறிஸ்தவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்வும் மகிழ்ச்சியான தருணங்களால் நிரம்பியிருக்கட்டும். சமூகத்தில், அமைதியும், அன்பும் நிரம்பியிருக்கட்டும். அனைவருக்கும், இயேசு பெருமான் தமது ஆசீர்வாதங்களை தொடர்ந்து அருளட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.