லண்டன் செல்லும் அண்ணாமலை - தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்?
Jul 1, 2024, 08:55 IST1719804300405

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். இதற்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர்.
லண்டன் செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை ஆறு மாத காலம் லண்டனில் தங்கியிருந்தால் கட்சி பணிகள் தொய்வடையும் . எனவே தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் அதன் அடிப்படையில் கட்சியை பலப்படுத்த வேறு தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.