அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை- தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரிக்கத் தேசிய மகளிர் ஆணைய குழு இன்னும் சற்று நேரத்தில் பல்கலைக்கழகம் வருகை தரவுள்ளனர். ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தவுள்ளனர். மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் பாதுகாப்பு குறைபாடாக விளங்கக்கூடியவை எவை என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் குழுவினர் பேசவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.