யார் அந்த சார்? - மாணவி புதிய தகவல்

 
கைதான ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் விசாரணையின்போது சார் எனக்கூறி ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதி செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஞான சேகரன் மொபைல் Air plan Modeல் இருந்தது எனவும், சார் என்று யாரும் இல்லை எனவும் காவல் ஆணையர் அருண் சொன்ன தகவல் பொய்யானது. ஞான சேகரனுடன் திருப்பூரைச் சேர்ந்த இன்னொருவர் இருந்துள்ளார் என்பதை சிறப்பு புலனாய்வு குழு உறுதி செய்துள்ளது.மேலும் ஞானசேகரன் செல்போனில் ஒருவரை தொடர்புகொண்டதாகவும், அந்த சாருடன் இருக்குமாறு தன்னிடம் கூறியதாகவும் மாணவி விசாரணையின்போது கூறியுள்ளார்.