அண்ணா பல்கலை. வழக்கு - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் #தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில், சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், FIR லீக் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியது. அதன் அடிப்படையில் காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. NICயின் தொழில்நுட்பக் கோளாறால் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு அரசு காரணம் இல்லை என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த உத்தரவை மட்டும் ரத்துசெய்ய கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு காவல்துறை காரணமில்லை. ஒன்றிய அரசின் என்.ஐ.சி நிர்வாக குறைபாடே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மேல்றையீட்டு மனுவில் கோரியுள்ளது. அதே நேரத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை.