“காதலிக்க அப்போ நேரம் இருந்துச்சி... இப்போ இல்ல”- அனிருத்
எனக்கு காதலிக்க நேரம் முன்னாடி இருந்தது, ஆனால் தற்போது இல்லை என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் ஜெயம் ரவி மற்றும் நித்தியா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. முன்னதாக இவ்விழாவினை முன்னிட்டு இத்திரைப்படத்தில் நடித்தவர்களும் சிறப்பு விருந்தினர்களும் சிவப்பு கம்பள பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
விழாவில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், “நான் இந்த விழாவிற்கு இசையமைப்பாளராகவோ, விருந்தினராகவோ வரவில்லை. ஜியர் லீடராக வந்துள்ளேன். எனக்கு காதலிக்க நேரம் முன்னாடி இருந்தது தற்போது இல்லை. விடாமுயற்சி அப்டேட் அந்த படத்தோட தயாரிப்பாளர் கொடுப்பார். தளபதி69 அப்டேட் அந்த படத்தோட தயாரிப்பாளர் கொடுப்பார், லியோ திரைப்படத்தின் ஓ.எஸ்டி விரைவில் வரும்” என்று கூறினார்.