தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்ல வரும் ஆந்திர இளைஞர்! 450 கிலோமீட்டர் நடைபயணம்!

 
se

 தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு இளைஞர் 450 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.  நடைப்பயணத்தின் போது ஸ்டாலின் புகைப்படம் கொண்ட பதாகையை ஏந்தி வருகிறார்.  அந்தப் பதாகையில் , தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி சிறப்பாக உள்ளது.  அது மேன்மேலும் தொடர வேண்டுகிறேன் என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலத்தில் ராஜமுந்திரி மாவட்டம் ஸ்ரீகாகுளம் பகுதியில் ராஜம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்.  30 வயதான இந்த இளைஞர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.  இவருக்கு திருமணமாகி ரமாதேவி என்கிற மனைவியும் ஒரு மகளும் , ஒரு மகனும் உள்ளனர்.   தெலுங்கு நடிகர்  பவன் கல்யாணின் ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.  

 ஆந்திராவை சேர்ந்தவர்  என்றாலும் பவன் கல்யாண் கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் தமிழக முதல்வரின் செயல்பாடுகளை அறிந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஆந்திராவில் இருந்து சென்னைக்கு நடைபயணமாக வந்து கொண்டிருக்கிறார்.  

tt

 அந்த இளைஞர் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி டை பயணம் மேற்கொண்டிருக்கிறார் .  கடந்த 10ஆம் தேதி அன்று காலை 6 மணியளவில் ஹைதராபாத்தில் நடைபயணத்தை தொடங்கிய அந்த இளைஞர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தமிழக ஆந்திர எல்லைப்பகுதியான எளாவூர் ஏழுகிணறு பகுதிக்கு வந்திருக்கிறார்.

 இது குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டிஜே கோவிந்தராஜன்,  சேகரை வரவேற்று அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டியிருக்கிறார்.   மேலும் தனது அலுவலகத்தில் சிறிது நேரம் அந்த இளைஞரை ஓய்வெடுக்க அறிவுறுத்தி அவருக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்து அதன் பின்னர் சென்னை நோக்கி அவரை வழி அனுப்பி வைத்திருக்கிறார்.

sc

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஆந்திர முதலமைச்சர் ஹெலிகாப்டர்களில் பறந்தபடி பார்த்து செல்கிறார்.  ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சர் தேங்கிய மழை நீரில் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.  அவரின் ஆட்சியில் மேலும் அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளையும் அளித்துவரும் திட்டங்களையும் கண்டு பெருமை கொள்கிறேன்.   இந்தியாவின் சிறந்த முதல்வராக அவரைப் பார்க்கிறேன்.  அதனால் ஏழை எளிய மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நபரை எனக்கு அதிகம் பிடிக்கும்.   அவரை நேரில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன்.  அதுவும் நடை பயணமாக சென்று அவருடைய அவரை சந்திக்க முடிவு எடுத்தேன்.  ஆந்திர மக்களும் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று தான் அவரின் உருவம் அடங்கிய பதாகைகளை ஏந்தி நடைபயணம் மேற் கொண்டுள்ளேன் என்று செய்தியாளர்களிடம்  தெரிவித்திருக்கிறார்.