மகாவிஷ்ணு விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்- அன்பில் மகேஷ்
மகாவிஷ்ணு விவகாரம் தற்போது காவல்துறையின் நடவடிக்கையில் உள்ளது, சட்டம் தன் கடமையை செய்யும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “தன்னைப் பொறுத்தவரை ஒரு பிரச்சனை வருகிறது என்றால் அந்த பிரச்சினையை உடனடியாக சந்திக்க வேண்டும், அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்ன நடவடிக்கை என்பதை ஆய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இது காவல்துறை வசம் சென்றுள்ளது. மகாவிஷ்ணு மீது தவறி இருக்கிறதா? இல்லையா?... மாற்றுத்திறனாளிகள், மகாவிஷ்ணு மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். காவல்துறையினரும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டம் தன் கடமையை செய்துள்ளது. அமெரிக்காவில் இருந்தாலும், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்காக ஒரு வரையறையை ஏற்படுத்த வேண்டும், எப்போதாவது இது போன்ற ஒரு நிகழ்வு நடக்கும் போது அது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது.
தமிழ்நாடு சாதி மதமற்ற அமைதியான மாநிலமாக உள்ள போது இதுபோன்ற மூடநம்பிக்கையை தூண்டுகின்ற வகத்தில் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய சட்டம் 51 ஏ ஹச் பி படி அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை சார்ந்து சிந்திக்க வேண்டும் இந்திய சட்டத்திலேயே உள்ளது. இது போன்ற ஒரு நிகழ்வு நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக முதல்வர் அமெரிக்காவில் இருந்தாலும் இங்கே ஒரு சர்ச்சை நடக்கும் போது அங்கிருந்து ஒரு அறிக்கை விடுகிறார் இனி பள்ளி கல்வித்துறையில் நிகழ்ச்சி நடத்தும்போது வழிமுறை வகுத்து யார் நிகழ்ச்சி நடத்த வேண்டும்? யார் யார் பேச வேண்டும் வரையறுக்க இருக்கின்றோம் என்பதை கூறி இருக்கிறார் அதற்கான ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.