’இது என்ன புதுசா இருக்கு?’ நேப்பியர் பாலத்தை அலங்கரிக்கும் அனமார்பிக் ஓவியங்கள்!
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு சென்னை நேப்பியர் பாலத்தில், 'அனமார்பிக்' கலையை பயன்படுத்தி, விளையாட்டு வீரர்களின் ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடப்பாண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், செப்., 10 முதல் பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது. இதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தில், 'அனமார்பிக்' முறையில், விளையாட்டு ஓவியங்களை வரைந்து, அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கலையை பயன்படுத்தி, நேப்பியர் பாலத்தின் அரை சக்கர வடிவிலான துாண்களில், கிரிக்கெட், கால்பந்து, சிலம்பம், குத்துசண்டை, ஓட்ட பந்தயம், கபடி, பேட்மின்டன், டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஒட்டி, சென்னை நேப்பியர் பாலத்தில் 'அனமார்பிக்' கலையை பயன்படுத்தி தூண்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. pic.twitter.com/vJTYwSuyfv
— Ks Mani (@ksmanirithvik) October 12, 2024
துாரத்தில் இருந்து பார்க்கும்போது, இந்த படங்கள் முழுமையாக தெரிகின்றன. அருகே வரும்போது ஓவியங்கள் சிதைந்துள்ளது போன்று தெரிகின்றன. மேம்பாலத்தின் மையப்பகுதியில், முதல்வர் கோப்பைக்கான லோகோவாக, நீலகிரி வரையாடு சிலை வைக்கப்பட்டுள்ளது.சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது, நேப்பியர் பாலத்தில், செஸ் போர்டு ஓவியம் வரையப்பட்டது குறிப்பிடத்தக்கது.