பேருந்து ஓட்டுனரின் கவனத்தால் படியிலிருந்து தவறிய முதியோர் தம்பதி

 
பேருந்து

வயதான தம்பதி படிக்கட்டில் ஏறுவதை கவனிக்காமல் அலட்சியமாக பேருந்தை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநரால் மூதாட்டியும் அவரைத் தொடர்ந்து முதியவரும் அடுத்தடுத்து சாலையில் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வத்தலகுண்டு கொடைக்கானல் மலை சாலையில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கொடைக்கானலில் இருந்து பழனி சாலைக்கு அரசு பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. மலை சாலைகளில் பயணம் செய்யக்கூடிய பேருந்துகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் பயணித்து வரக்கூடிய நிலையில் நேற்று கொடைக்கானல்-  பெருமாள் மலை அருகே உள்ள பழனி பிரிவு என்ற பேருந்து நிறுத்தத்தில் கொடைக்கானலில் இருந்து கொடைரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்தில் முதியோர் தம்பதி ஏரி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் பேருந்து எடுக்கப்பட்டது. முதியோர்கள் ஏற முயற்சித்த போது எடுத்ததால் தவறிய தம்பதிகள் பேருந்தில் இருந்து கீழே சரிந்து விழுந்தனர்.


இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கொடைக்கானல் மலை சாலையில் பயணிக்க கூடிய தனியார் பேருந்துகளில் ஏர்ஹாரன், அதிவேகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...