நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் நியமனம்

 
அம்ரித்

நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அம்ரித்தை நியமித்து தமிழ்நாடு தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரி ஆட்சியராக இருந்த பிரியதர்ஷினி (கூடுதல் பொறுப்பு) மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அம்ரித் நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்தவர்.

நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அம்ரித் நியமனம் - தமிழக அரசு உத்தரவு |  SP Amrith appointed as Nilgiris District Collector by Tamil Nadu Chief  Secretary | Puthiyathalaimurai - Tamil ...

கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட இன்னசென்ட் திவ்யா, கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றாப்பட்டு பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக இன்னசென்ட் திவ்யா, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பதவி வகித்தார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுபேற்ற பிறகு சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா பணியை சிறப்பாக முன்னெடுத்தது, யானைகளின் வழிதடங்களை மீட்பது உள்ளிட்ட  அவரது பணிக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவரை பணிமாற்றம் செய்தது குறிப்பிடதக்கது.